Thanks world leaders for their congratulatory messages

மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றதை யொட்டி வாழ்த்து தெரிவித்த உலகநாடுகளின் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் உலகநாடுகளின் தலைவர்கள் அனுப்பிய செய்திகளுக்கு திரு மோடி பதிலளித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எழுதிய பதிவுக்கு பதிலளித்த பிரதமர்,

"உங்கள் செய்தியை மிகவும் பாராட்டுகிறேன் பில் கேட்ஸ். சில மாதங்களுக்கு முன்பு, நிர்வாகம், சுகாதாரப் பராமரிப்பில் தொழில்நுட்பத்தின் மாற்றத்தக்க பங்களிப்பு, பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாடு ஆகியவை குறித்து நாம் நடத்திய நேர்மறையான, ஈடுபாட்டுடன் கூடிய உரையாடலை நினைவு கூருங்கள். மனித சமுதாயத்தின் நலனுக்காக புதுமைகளை ஊக்குவிப்பதற்கான நமது கூட்டாண்மையை நாங்கள் மதிக்கிறோம்.

 

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் திரு ஹமீத் கர்சாயின் பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

"நண்பர் ஹமீத் கர்சாய் உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி"

உகாண்டா அதிபர் திரு யோவேரி கே முசவேணியின் பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

 

"உங்கள் அன்பான வார்த்தைகளுடன் கூடிய வாழ்த்துக்கு மிகவும் பாராட்டுக்கள் அதிபர் யோவேரி கே முசவேணி!. உகாண்டாவுடனான வலுவான கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வோம். ஜி20 தலைமைப் பொறுப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரானதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அனைத்து துறைகளிலும் நமது வரலாற்று தொடர்பை மேலும் வளர செய்வோம்".

ஸ்லோவேனியா பிரதமர் திரு ராபர்ட் கோலோப் பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

 

"உங்கள் அன்பான வாழ்த்துக்களைப் பாராட்டுகிறேன், பிரதமர் ராபர்ட் கோலோப். எனது மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியாவுக்கும், ஸ்லோவேனியாவுக்கும் இடையிலான நெருக்கமான கூட்டாண்மையை நாம் தொடர்ந்து வலுப்படுத்துவோம்.

பின்லாந்து பிரதமர் திரு பெட்டேரி ஓர்போவின் பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

"உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி பிரதமர் பெட்டேரி ஆர்போ. இந்தியா-பின்லாந்து உறவுகளை மேம்படுத்தவும், நமது நட்புறவை மேலும் வலுப்படுத்தவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்."

 

கனடா பிரதமர் திரு ஜஸ்டின் ட்ரூடோவின் பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

"வாழ்த்துச் செய்திக்கு நன்றி. பரஸ்பர புரிதல், அனைவரது தேவைகளுக்கும் மதிப்பளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் கனடாவுடன் இணைந்து பணியாற்றுவதை இந்தியா எதிர்நோக்குகிறது.

செயிண்ட் கிட்ஸ், நெவிஸ் பிரதமர் டாக்டர் டெரன்ஸ் ட்ரூவின் பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

 

"நன்றி பிரதமர் டெரன்ஸ் ட்ரூ. செயின்ட் கிட்ஸ் & நெவிஸுடன் பல நூற்றாண்டுகள் பழமையான மக்கள் தொடர்புகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உலகளாவிய தெற்கில் ஒரு முக்கிய கரீபியன் பகுதி கூட்டாளியாக வலுவான ஒத்துழைப்பை உருவாக்க உங்களுடன் பணியாற்றுவதை எதிர்நோக்குகிறோம்.

ஏமன் பிரதமர் திரு அஹ்மத் அவாத் பின் முபாரக்கின் ஒரு பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

"பிரதமர் அஹ்மத் அவாத் பின் முபாரக் உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி. ஏமனுடனான வரலாற்று சிறப்புமிக்க நட்புறவை நாங்கள் மதிக்கிறோம். அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, செழிப்பு ஆகியவை உங்கள் நாட்டு மக்களிடையே நிலவ நாங்கள் விரும்புகிறோம்.

 

டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு எலான் மஸ்க் வெளியிட்ட பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

"உங்கள் வாழ்த்துக்களைப் பாராட்டுகிறேன் எலான் மஸ்க். திறமையான இந்திய இளைஞர்கள், எங்கள் மக்கள்தொகை, கணிக்கக்கூடிய கொள்கைகள், நிலையான ஜனநாயக அரசியல் ஆகியவை நமது கூட்டாளர்கள் அனைவருக்கும் வணிக சூழலை தொடர்ந்து வழங்கும்.

 

எஸ்வாட்னி பிரதமர் திரு ரஸ்ஸல் மிமிசோ டிலாமினியின் பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

"ரஸ்ஸல் மிமிசோ டிலாமினி, அரச குடும்பம் மற்றும் எஸ்வாட்னி இராஜ்ஜியத்தின் நட்பு மக்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. நமது கூட்டாண்மையை வலுப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்றார்.

பெலிஸ் பிரதமர் திரு ஜான் பிரைசினோவின் ஒரு பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

 

"நன்றி, பிரதமர் ஜான் பிரைசினோ. பெலிஸுடனான நட்பை நாங்கள் மதிக்கிறோம், இந்த நட்புறவை வலுப்படுத்தவும், உலகளாவிய தெற்கின் முன்னேற்றம், செழுமையை நோக்கி பணியாற்ற எதிர்நோக்குகிறோம்.

 

பெல்ஜியம் பிரதமர் திரு அலெக்சாண்டர் டி குரூவின் பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

"பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவுக்கு நன்றி. துடிப்பான, வலுவான இந்தியா – பெல்ஜியம் இடையேயான கூட்டாண்மை புதிய பதவிக்காலத்தில் தொடர்ந்து புதிய உச்சத்தை அடையும்.

பொலிவியா அதிபர் திரு லூயிஸ் ஆர்ஸின் பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

"உங்கள் பாராட்டுகளுக்கும், இந்திய ஜனநாயகத்திற்கான உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், பாராட்டுகள் அதிபர் லூயிஸ் ஆர்ஸ். லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவுக்கான எங்களுடைய மதிப்புமிக்க கூட்டாண்மையாக பொலிவியா உள்ளது. நமது ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

 

அயர்லாந்து பிரதமர் திரு சைமன் ஹாரிஸ் பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

"உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி பிரதமர் சைமன் ஹாரிஸ். இந்தியா-அயர்லாந்து இடையேயான உறவுகள் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஜனநாயக அம்சங்களின் அடிப்படையில் நிலைநாட்டப்பட்டுள்ளன. இருநாட்டு உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், நமது கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதற்கான உங்கள் உறுதிப்பாட்டை நான் பகிர்ந்து கொள்கிறேன்."

 

ஜாம்பியா அதிபர் திரு ஹகைண்டே ஹிச்சிலேமா பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

"அதிபர் ஹகைண்டே ஹிச்சிலேமாவின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா-ஜாம்பியா இடையேயான உறவு மேலும் வலிமையுடன் வளரும்".

இந்தோனேசியாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. பிரபோவோ சுபியான்டோ அவர்களின் ஒரு பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

 

"அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோ சுபியான்டோவின் வாழ்த்துகளுக்கு நன்றி. நமது விரிவான உத்திசார்ந்த கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நமது பழமையான உறவுகளை மேம்படுத்தவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்."

சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் திருமதி வயோலா ஆம்ஹெர்ட் பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,

 

"அதிபர் வயோலா ஆம்ஹெர்ட், உங்களின் கனிவான வார்த்தைகளை நாங்கள் பாராட்டுகிறோம். இந்தியாவில் நடைபெறும் 'ஜனநாயகத் திருவிழா' உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா-சுவிட்சர்லாந்து இடையேயான உறவை மேம்படுத்த நாம் இணைந்து செயல்படுவோம்."

 

Replying to a post by the Prime Minister of Ireland, Mr Simon Harris, the Prime Minister said;

“Grateful for your kind words Prime Minister Simon Harris. India- Ireland ties are anchored in shared democratic values. I share your commitment to advance our partnership as we celebrate the 75th anniversary of relations.”

 

Responding to a post by the President of Zambia, Mr Hakainde Hichilema, the Prime Minister said;

“Grateful to President Hakainde Hichilema for his kind words of felicitations. The India-Zambia partnership will continue to grow from strength to strength.”

 

Responding to a post by the President-Elect of Indonesia, Mr Prabowo Subianto, the Prime Minister said;

“Thank you President-elect Prabowo Subianto for your good wishes. I look forward to working closely with you on strengthening our comprehensive strategic partnership and build on our age-old ties.”

 

Replying to a post by the President of the Swiss Confederation, Ms Viola Amherd, the Prime Minister said;

“President Viola Amherd, we appreciate your kind words. The ‘Festival of Democracy’ in India has indeed drawn the global attention. We will work together to enhance India- Switzerland partnership.”

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

Prime Minister Shri Narendra Modi paid homage today to Mahatma Gandhi at his statue in the historic Promenade Gardens in Georgetown, Guyana. He recalled Bapu’s eternal values of peace and non-violence which continue to guide humanity. The statue was installed in commemoration of Gandhiji’s 100th birth anniversary in 1969.

Prime Minister also paid floral tribute at the Arya Samaj monument located close by. This monument was unveiled in 2011 in commemoration of 100 years of the Arya Samaj movement in Guyana.