ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான வட்டு எறிதல்-எஃப் 54/55/56 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
கதுனியாவின் அர்ப்பணிப்பும், சிறந்த செயல்திறனும் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்று அவர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆண்களுக்கான வட்டு எறிதல்-எஃப் 54/55/56 பிரிவில் சிறப்பான வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பும், சிறந்த செயல்திறனும் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளன.”
Many congratulations to @YogeshKathuniya for his outstanding Silver Medal win in Men's Discus Throw-F54/55/56. His commitment and outstanding performance have filled our nation with pride. pic.twitter.com/2v6FhYzKqy
— Narendra Modi (@narendramodi) October 24, 2023