ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்யூ5 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்யூ5 பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துவதுடன் இனி வரும் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்."
Congratulations @Thulasimathi11 for the Gold Medal victory in the Badminton Women's Singles SU5 event. Her success makes every Indian proud and will motivate upcoming athletes. pic.twitter.com/zCKV5pTicy
— Narendra Modi (@narendramodi) October 27, 2023