2023 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியியல் விருதுகள் 2023-ல் ‘ஆண்டின் சிறந்த ஆளுநர்’ பிரிவில் விருது பெற்றதற்காக, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்திகாந்த தாஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிஎன்பிசி டிவி 18 -ன் செய்தியைப் பகிர்ந்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது ;
"ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் அவர்கள், 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியியல் விருதுகளில் 'ஆண்டின் சிறந்த ஆளுநர் ' விருதை பெற்றிருப்பது, நமது நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையாகும். அவருக்கு வாழ்த்துகள்."
It is a matter of immense pride for our country that the @RBI Governor, Shri Shaktikanta Das Ji has been conferred with the ‘Governor of the year’ Award in the Central Banking Awards 2023. Congratulations to him. https://t.co/J7L9wQWW2Q
— Narendra Modi (@narendramodi) March 16, 2023