பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள் 2022-இன் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சோனல் பட்டேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்ததாவது:
“திறமையும், நிதானமும், உறுதியும் இணையும் போது, அனைத்தும் சாத்தியமே. பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் சோனல் பட்டேல் இதை நிரூபித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். வரும் காலங்களிலும் தனித்திறமையோடு அவர் தொடர்ந்து விளங்க பிரார்த்திக்கிறேன். #Cheer4India”
When talent, temperament and tenacity combine, nothing is impossible. Sonal Patel has shown this in letter and spirit by winning a Bronze medal in Para Table Tennis. Congratulations to her. I pray that she continues to distinguish herself in the coming times. #Cheer4India pic.twitter.com/OuvspIw4LF
— Narendra Modi (@narendramodi) August 7, 2022