அசாம் மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. சர்பானந்த சோனோவால் மற்றும் டாக்டர். எல். முருகன் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது டுவிட்டரில்,
“அசாம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது அமைச்சரவை சகாக்கள் திரு. சர்பானந்த சோனோவால் @sarbanandsonwal மற்றும் டாக்டர். எல். முருகனுக்கு @Murugan_MoS எனது வாழ்த்துக்கள். நாடாளுமன்ற நடவடிக்கைகளை அவர்கள் செழுமைப்படுத்துவார்கள் என்றும் பொது மக்களின் நலனுக்கான நடவடிக்கைகளை மேலும் மேலும் மேம்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன்”, என்று கூறியுள்ளார்.
Congratulations to my Ministerial colleagues, Shri @sarbanandsonwal Ji and Shri @Murugan_MoS Ji on being elected to the Rajya Sabha from Assam and Madhya Pradesh respectively. I am confident that they will enrich Parliamentary proceedings and further our agenda of public good.
— Narendra Modi (@narendramodi) September 28, 2021