2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர்களுக்கான 10,000 மீட்டர் வேக நடைப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“பர்மிங்காம் விளையாட்டுகளில் நமது வேக நடைப் பந்தய பயிற்சி குழு சிறந்து விளங்குவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 10,000 மீ பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் குமாருக்கு வாழ்த்துகள். அவரது வரவிருக்கும் முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள். #Cheer4India"
Good to see our race walking contingent excel at the Birmingham games. Congratulations to Sandeep Kumar for winning a Bronze medal in the 10,000m event. Wishing him the very best for his upcoming endeavours. #Cheer4India pic.twitter.com/smFkgXVAPy
— Narendra Modi (@narendramodi) August 7, 2022