காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் மல்யுத்த போட்டியின் 62 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“நம் தடகள வீரர்கள், பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து பெருமை அளித்து வருகிறார்கள். சாக்ஷி மாலிக்கின் தன்னிகரில்லாத விளையாட்டு செயல்திறனால் உற்சாகமடைந்தேன். மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திறமையின் ஆற்றல் சக்தியாக விளங்கும் அவர், அபாரமான நெகிழ்தன்மை வாய்க்கப் பெற்றுள்ளார்.”
Our athletes continue to make us proud at CWG Birmingham. Thrilled by the outstanding sporting performance of @SakshiMalik. I congratulate her for winning the prestigious Gold medal. She is a powerhouse of talent and is blessed with remarkable resilience. pic.twitter.com/svETMdfVBR
— Narendra Modi (@narendramodi) August 5, 2022