பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022ல் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ரவி தஹியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
" ஒரு சாம்பியன் போல விளையாடி நம் நாட்டுக்கு மகத்தான பெருமை சேர்த்துள்ளார். பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதற்காக @ravidahiya60 க்கு வாழ்த்துகள். ஒருவரிடம் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் எந்த கனவும் பெரிதல்ல என்பதை அவரது வெற்றி நிரூபித்துள்ளது. #Cheer4India"
He played like a champion and brings immense pride for our nation. Congratulations to the phenomenal @ravidahiya60 for winning a Gold at the Birmingham CWG. His success proves that no dream is too big if one is passionate and dedicated. #Cheer4India pic.twitter.com/SfRRb4ZGb0
— Narendra Modi (@narendramodi) August 6, 2022