இந்தோனேசிய அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றதற்காகவும், அதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் திரு பிரபோவோ சுபியான்டோவுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:
இந்தோனேசிய அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில் இந்தோனேசிய மக்களுக்கும், அதில் வெற்றி பெற்றுள்ள திரு பிரபோவோ சுபியாண்டோ-வுக்கும் எனது வாழ்த்துகள். இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய தலைமையுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்."
Congratulations to the people of Indonesia on the successful Presidential elections and @prabowo on the lead. Look forward to working with the new Presidency to further strengthen Comprehensive Strategic Partnership between India and Indonesia.
— Narendra Modi (@narendramodi) February 18, 2024