18 வயதுக்கு மேற்பட்ட 100% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக தேவ்பூமி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கொவிட் -19க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் உத்தராகண்டின் இந்த சாதனை மிக முக்கியமானது.
உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமியின் டுவிட்டர் செய்திக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளதாவது;
“தேவ்பூமி மக்களுக்கு வாழ்த்துகள். கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் உத்தராகண்டின் சாதனை மிக முக்கியமானது. உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நமது தடுப்பூசித் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். மக்களின் உதவியோடு இத்திட்டம் வெற்றிப் பெறும். பங்களிப்பு அவசியம்”
देवभूमि के लोगों को बहुत-बहुत बधाई। कोविड के खिलाफ देश की लड़ाई में उत्तराखंड की यह उपलब्धि अत्यंत महत्वपूर्ण है। मुझे विश्वास है कि वैश्विक महामारी से लड़ने में हमारा वैक्सीनेशन अभियान सबसे अधिक प्रभावी साबित होने वाला है और इसमें जन-जन की भागीदारी अहम है। https://t.co/FdfkPWr6dC
— Narendra Modi (@narendramodi) October 18, 2021