வர்த்தக ரீதியிலான முதல் பிரத்யேக பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 திட்டம் வெற்றியடைந்ததற்கு நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மற்றும் இஸ்ரோவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ வர்த்தக ரீதியிலான முதல் பிரத்யேக பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 திட்டம் வெற்றியடைந்ததற்கு என்எஸ்ஐஎல் மற்றும் இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். நாட்டின் விண்வெளி சீர்திருத்தங்களில், இது புது சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. 4 சிறிய செயற்கை கோள்கள் உட்பட, 18 துணை செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டுள்ளது, நமது இளைஞர்களின் ஆற்றல் மற்றும் புதுமையை வெளிகாட்டுகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to NSIL and @isro on the success of the 1st dedicated commercial launch of PSLV-C51/Amazonia-1 Mission. This ushers in a new era of Space reforms in the country. 18 co-passengers included four small satellites that showcase dynamism and innovation of our youth. pic.twitter.com/BbWYGLsyvo
— Narendra Modi (@narendramodi) February 28, 2021
பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் மூலம் அமேசானியா-1 செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் விடுத்துள்ள மற்றொரு சுட்டுரையில், ‘‘ பிரேசில் நாட்டின் அமேசானியா-1 செயற்கை கோள் பிஎஸ்எல்வி-சி51 மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு வாழ்த்துக்கள். நமது விண்வெளி ஒத்துழைப்பில், இது வரலாற்று சிறப்புமிக்க தருணம். பிரேசில் விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுக்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Congratulations President @jairbolsonaro on the successful launch of Brazil's Amazonia-1 satellite by PSLV-C51. This is a historic moment in our space cooperation and my felicitations to the scientists of Brazil. @isro
— Narendra Modi (@narendramodi) February 28, 2021
Remembering our former PM Shri Morarjibhai Desai. In his long years of public service, he worked tirelessly for India’s development. He was known for his impeccable integrity and unwavering commitment to democracy.
— Narendra Modi (@narendramodi) February 28, 2021