நெதர்லாந்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள டிக் ஷூஃபுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் மேலாண்மை, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியா-நெதர்லாந்து கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதை எதிர்நோக்குவதாக திரு மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"நெதர்லாந்து பிரதமராக பொறுப்பேற்றுள்ள டிக் ஷூஃபுக்கு வாழ்த்துகள். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் மேலாண்மை, விவசாயம், போக்குவரத்து, புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-நெதர்லாந்து கூட்டாண்மையை மேம்படுத்த நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன். @MinPres"
Congratulations Dick Schoof on assuming office as the Prime Minister of the Netherlands. Look forward to closely working together to advance India-Netherlands partnership including in the areas of renewable energy, water management, agriculture, mobility, new and emerging…
— Narendra Modi (@narendramodi) July 2, 2024