ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான டிங்கி - ஐஎல்சிஏ 4 பிரிவு படகுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நேஹா தாக்கூருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு!
பெண்கள் டிங்கி - ஐஎல்சிஏ 4 பிரிவு படகுப் போட்டியில் நேஹா தாக்கூர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
அவரது அசாதாரண செயல்பாடு, அவரது திறமை மற்றும் கடின உழைப்புக்கு இது ஒரு சான்றாகும். அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்."
இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
A shining example of dedication and perseverance!
— Narendra Modi (@narendramodi) September 26, 2023
Neha Thakur has secured a Silver medal in Girl's Dinghy - ILCA4 event.
Her exceptional performance is a testament to her talent and hard work. Congratulations to her and best wishes for her future endeavours. pic.twitter.com/ekNjURs61n