போலந்தில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் தலைவர் கோப்பைக்கான போட்டியில் பதக்கங்கள் வென்ற மானு பாகெர், ராகி சர்னோபத், சவுரப் சவுத்ரி மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது;
போலந்தில் ஐஎஸ்எஸ்எப் தலைவர் கோப்பைக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்கள் வென்ற ரியல்மானுபாகெர், சர்னோபத்ராஹி, எஸ்.சவுத்திரி மற்றும் அபிஷேக் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்களின் அற்புதமான செயல்பாடுகளால், இந்திய மக்கள் பெருமையடைகின்றனர். இந்த விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.’’
Congratulations to @realmanubhaker, @SarnobatRahi, @SChaudhary2002 and @abhishek_70007 for wining medals at the @ISSF_Shooting President’s Cup in Poland. The people of India are proud of their stupendous performance. Best wishes to these athletes for their future endeavours. pic.twitter.com/7hyHnDs0yM
— Narendra Modi (@narendramodi) November 10, 2021