பிரேசில் அதிபராக பொறுப்பேற்றுள்ள லூயிஸ் இனாஷியோ லுலா டா சில்வாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் பிரேசில் அதிபராக பொறுப்பேற்றுள்ள லூயிஸ் இனாஷியோ லுலா டா சில்வாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மூன்றாவது முறையாக மீண்டும் அதிபராக பதவியேற்றுள்ள அவருக்கு, வெற்றிகள் பல குவியட்டும் எனவும், இந்தியா- பிரேசில் இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெரும் வகையில் சேர்ந்த பயணிப்பதை ஆவலோடு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Hearty congratulations to @LulaOficial on assuming office as the President of Brazil. I wish him a successful third term and look forward to working with him to strengthen India - Brazil Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) January 2, 2023