லக்சம்பர்க்கின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லூக் ப்ரீடனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"லக்சம்பர்க் பிரதமராக பொறுப்பேற்றுள்ள @LucFrieden மனமார்ந்த வாழ்த்துகள். ஜனநாயக விழுமியங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான எங்கள் பகிரப்பட்ட நம்பிக்கையில் வலுவாக வேரூன்றியுள்ள இந்தியா-லக்சம்பர்க் உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலாக உள்ளேன்”.
Heartiest congratulations @LucFrieden on taking over as the Prime Minister of Luxembourg. Looking forward to working closely with you to further strengthen India-Luxembourg relations that are strongly rooted in our shared belief in democratic values and the Rule of Law.
— Narendra Modi (@narendramodi) November 20, 2023