ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ கிராம் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்னுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ கிராம் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்னுக்கு @LovlinaBorgohai வாழ்த்துகள்.
தனது அசாதாரண திறமை மற்றும் நுட்பத்தை வெளிப்படுத்தியதன் மூலம், நம் தேசம் கொண்டாடுவதற்கு ஒரு சிறந்த காரணத்தை அவர் வழங்கியுள்ளார். அவர் தொடர்ந்து முன்னேறி, இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கட்டும்."
Congratulations to @LovlinaBorgohai for bringing home the Silver Medal in the Women's Boxing 75 kg category.
— Narendra Modi (@narendramodi) October 4, 2023
With her exceptional display of skill and technique, she has given our nation a great reason to celebrate. May she keep soaring higher and making India proud. pic.twitter.com/7HXPBz9fEU