பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022-ல் பேட்மின்டனில் தங்கப்பதக்கம் வென்ற லக்ஷயா சென்னுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“சாதனையால் முன்னேற்றம் அடைந்தவர் @ lakshya_sen லக்ஷயா சென். பேட்மின்டனில் தங்கப்பதக்கம் வென்றதற்காக வாழ்த்துக்கள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சிறந்த முறையில் விளையாடிய அவர், இறுதிப்போட்டியில் நிகரற்ற உறுதியை வெளிப்படுத்தினார். இவர், இந்தியாவின் பெருமை. இவரின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.”
Elated by the accomplishment of @lakshya_sen. Congratulations on winning the Gold medal in Badminton. He’s played excellently through the CWG and showed outstanding resilience during the Finals. He is India’s pride. Best wishes to him for his future endeavours. #Cheer4India pic.twitter.com/1b5elEPbHM
— Narendra Modi (@narendramodi) August 8, 2022