இரண்டாம் கட்ட கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ‘மாதிரி’ பிரிவில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசக் கிராமங்கள், திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை 100% அடைந்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“பாராட்டுக்குரிய முயற்சியை மேற்கொண்டதற்காக ஜம்மு-காஷ்மீர் மக்களை நான் பாராட்டுகிறேன். தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் இது ஒரு மகத்தான செயல்பாடாகும்.”
Laudatory effort, for which I congratulate the people of Jammuand Kashmir. This is a monumental step in our journey towards a cleaner and healthier India. https://t.co/daxXYQ3aFY
— Narendra Modi (@narendramodi) October 2, 2023