விண்வெளியில் மற்றொரு தொழில்நுட்ப மைல்கல்லை எட்டியுள்ள இஸ்ரோவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 -ன் உந்துவிசைத் தொகுதி வெற்றிகரமாக மாற்றுப்பாதையில் சென்றது. மற்றொரு தனித்துவமான பரிசோதனையில், உந்துவிசைத் தொகுதி நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் சுற்றுப்பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.
இஸ்ரோவின் சமூக ஊடகப் பதிவுக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
“வாழ்த்துக்கள் இஸ்ரோ @isro. 2040 ஆம் ஆண்டுக்குள் ஒரு இந்தியரை நிலவுக்கு அனுப்பும் இலக்கு உட்பட நமது எதிர்கால விண்வெளி முயற்சிகளில் மற்றொரு தொழில்நுட்ப மைல்கல் எட்டப்பட்டுள்ளது."
Congratulations @isro. Another technology milestone achieved in our future space endeavours including our goal to send an Indian to Moon by 2040. https://t.co/emUnLsg2EA
— Narendra Modi (@narendramodi) December 6, 2023