பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின், ஆர்2 மகளிர் 10மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கணை மோனா அகர்வாலுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்;
“#பாரீஸ் பாராலிம்பிக்ஸ்2024-ன் ஆர்2 மகளிர் 10மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள்!
அவரது குறிப்பிடத்தக்க சாதனை, அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறந்து விளங்க வேண்டுமென்ற தாகத்தையும் வெளிப்படுத்துகிறது. மோனா-வால் இந்தியா பெருமிதம் அடைகிறது!
# Cheer4Bharat” என்று குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to Mona Agarwal on winning the Bronze medal in R2 Women 10m Air Rifle SH1 event at the Paris #Paralympics2024!
— Narendra Modi (@narendramodi) August 30, 2024
Her remarkable achievement reflects her dedication and quest for excellence. India is proud of Mona! #Cheer4Bharat