செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இரண்டே நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டதற்காக இந்திய அஞ்சல் துறைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பெண்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதிலும், அவர்களின் வளர்ச்சிக்கும் இது உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியதாவது:
“இத்தகைய மிகப்பெரிய சாதனையைப் புரிந்த இந்திய அஞ்சல் துறைக்கு நல்வாழ்த்துகள். இந்த முயற்சி, நாட்டின் திருமகள்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும், அவர்களுக்கு அதிகாரமளிக்கும்.”
इस बड़ी उपलब्धि के लिए @IndiaPostOffice को बहुत-बहुत बधाई! यह प्रयास देश की बेटियों के भविष्य को सुरक्षित करने के साथ उन्हें और सशक्त बनाएगा। https://t.co/PR705Sw7wv
— Narendra Modi (@narendramodi) February 11, 2023