பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மேதகு ஷெரிங் டோப்கே மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எனது நண்பர் மேதகு ஷெரிங் டோப்கேவுக்கும் @tsheringtobgay, மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நமது தனித்துவமான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்."
Heartiest congratulations to my friend @tsheringtobgay and the People’s Democratic Party for winning the parliamentary elections in Bhutan. Look forward to working together again to further strengthen our unique ties of friendship and cooperation.
— Narendra Modi (@narendramodi) January 9, 2024