ஈரான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு மசூத் பெசெஷ்கியானுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஈரான் அதிபராக நீங்கள் ( மசூத் பெசெஷ்கியான் - @drpezeshkian ) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். நமது மக்கள் மற்றும் இந்தப் பிராந்தியத்தின் நலனுக்காக நமது நீண்டகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதையும் உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதையும் எதிர்நோக்கியுள்ளேன்."
Congratulations @drpezeshkian on your election as the President of the Islamic Republic of Iran. Looking forward to working closely with you to further strengthen our warm and long-standing bilateral relationship for the benefit of our peoples and the region.
— Narendra Modi (@narendramodi) July 6, 2024