ஜெம் எனப்படும் அரசு இ-சந்தையில் அதிக கொள்முதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்..
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல், தமது ட்விட்டர் பதிவில், க்ரேடா-விக்ரேடா கௌரவ் சம்மான் சமரோவா 2023 விழாவில், அரசு இ-சந்தையில் சிறப்பாக செயல்பட்டவர்களின் சேவைகளை அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு வெகுமதிகள் அளிக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார். இந்த விழாவுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் ஜெம் எனப்படும் அரசு
இ-சந்தை ஏற்பாடு செய்திருந்தது.
திரு.பியூஷ் கோயலின் ட்விட்டுக்கு பதிலளித்த பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“அரசு இ-சந்தையில் சிறப்பாக செயல்பட்டவர்களின் பங்களிப்புக்கு பாராட்டுக்கள். இந்தியாவின் வளம் மற்றும் தற்சார்பு பயணத்திற்கு இத்தகைய முயற்சிகள் வலிமையூட்டும்”.
Congratulations to @GeM_India's top performers for their remarkable contributions. Such efforts strengthen India's journey towards prosperity and self-reliance. https://t.co/jn4QlJOzzW
— Narendra Modi (@narendramodi) June 28, 2023