பாரிசின் ஈஃபில் டவரில் இன்று முறைப்படியான யுபிஐ தொடக்கத்திற்காக ஃபிரான்சைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவும் உறவுகளை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மிகச்சிறந்த உதாரணம் என்று அவர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இதைக் காணப் பெருமையாக இருக்கிறது - யுபிஐ-யை உலக அளவில் கொண்டு செல்வதற்குக் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை இது குறிக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவும் உறவுகளை வலுப்படுத்தவும் இது மிகச்சிறந்த உதாரணமாகும்."
Great to see this- it marks a significant step towards taking UPI global. This is a wonderful example of encouraging digital payments and fostering stronger ties. https://t.co/jf1sTf41c5
— Narendra Modi (@narendramodi) February 2, 2024