2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அன்னு ராணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“அன்னு ராணி மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனை. அவர் சிறந்த திறமையைக் காட்டினார். ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் அவர் தொடர்ந்து சிறந்து விளங்குவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். #Cheer4India"
Annu Rani is remarkable athlete. She displayed great resilience and showed topmost skills. I am glad that she has won a Bronze medal in Javelin. Congratulations to her. I am certain she will continue to excel in the coming years. #Cheer4India @Annu_Javelin pic.twitter.com/CVPI87yRQZ
— Narendra Modi (@narendramodi) August 7, 2022