ஒலிம்பிக் ஆர்டர் விருது பெற்றதை முன்னிட்டு தடகள வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2008 ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அவரை விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் இயக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக திரு மோடி பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
அபினவ் பிந்த்ராவுக்கு ஒலிம்பிக் ஆர்டர் வழங்கப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். ஒரு தடகள வீரராக, வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அவர், விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார்.
It makes every Indian proud that @Abhinav_Bindra has been awarded the Olympic Order. Congratulations to him. Be it as an athlete or a mentor to upcoming sportspersons, he has made noteworthy contributions to sports and the Olympic Movement.
— Narendra Modi (@narendramodi) July 24, 2024