ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அபய் சிங் மற்றும் அனஹத் சிங்குக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக பிரதமர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
"ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்ற அபய்சிங் (@abhaysinghk98), அனஹத் சிங்குக்கு (@Anahat_Singh13) வாழ்த்துகள்! இது உண்மையிலேயே அற்புதமான செயல்திறன். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்"
Congratulations @abhaysinghk98 and @Anahat_Singh13 for winning the Bronze Medal in Squash Mixed Doubles for India! This was a truly fantastic performance. Best wishes for your future endeavours. pic.twitter.com/tCVDKH3T5D
— Narendra Modi (@narendramodi) October 4, 2023