உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதில் ஈடுபட்டுள்ளது என்று அவர் உறுதியளித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த சாலை விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும்.
காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். மாநில அரசின் மேற்பார்வையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
उत्तर प्रदेश के मिर्जापुर में हुआ सड़क हादसा अत्यंत पीड़ादायक है। इसमें जान गंवाने वालों के शोकाकुल परिजनों के प्रति मेरी गहरी संवेदनाएं। ईश्वर उन्हें इस पीड़ा को सहने की शक्ति प्रदान करे। इसके साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। राज्य सरकार की देखरेख…
— Narendra Modi (@narendramodi) October 4, 2024
உ.பி.யின் மிர்சாபூரில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் திரு மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"உ.பி.யின் மிர்சாபூரில் நடந்த சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the road accident in Mirzapur, UP. The injured would be given Rs. 50,000. https://t.co/scIUlNrwh1
— PMO India (@PMOIndia) October 4, 2024