பாவ்நகர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. சுனில் ஓஜா மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிஜேபிக்கும், சமூக சேவைத் துறைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். வாரணாசியில் அவர் ஆற்றிய பாராட்டத்தக்க பணியையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
”பாவ்நகர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுனில்பாய் ஓஜாவின் மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பிஜேபியின் அமைப்பு அளவிலும், சமூக சேவைத் துறையிலும் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். வாரணாசியிலும் சுனில்பாயின் பணி பாராட்டத்தக்கது.
அவரது ஆன்மா சாந்தியடையட்டும், இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியைக் குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும்...
ஓம் சாந்தி... !!"
ભાવનગરના ભૂતપૂર્વ ધારાસભ્ય સુનિલભાઈ ઓઝાના નિધનના સમાચાર આઘાતજનક છે.
— Narendra Modi (@narendramodi) November 29, 2023
ભારતીય જનતા પાર્ટીના સંગઠનના વિસ્તારમાં અને સમાજ સેવા ક્ષેત્રે એમનું યોગદાન સદાય યાદ રહેશે. વારાણસીમાં પણ સુનિલભાઈનું સંગઠનાત્મક કાર્ય સરાહનીય રહ્યું છે.
પ્રભુ તેમના દિવ્ય આત્માને શાંતિ અર્પે તથા પરિવારજનોને… pic.twitter.com/ksWrNwvz60