மூத்த தலைவர் திரு ஷியாம்தேவ் ராய் சவுத்ரி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு சவுத்ரி தனது வாழ்நாள் முழுவதும் பொது சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு காசியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதாக கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"தனது வாழ்நாள் முழுவதும் பொது சேவைக்காக அர்ப்பணித்த பிஜேபி மூத்த தலைவர் ஷியாம்தியோ ராய் சவுத்ரியின் மறைவால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நாங்கள் அனைவரும் அவரை 'தாதா' என்று அன்புடன் அழைத்தோம். அமைப்பை வளர்ப்பதிலும், மேம்படுத்துவதிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது மட்டுமல்லாமல், காசியின் வளர்ச்சியிலும் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டார். அவரது மறைவு காசிக்கும், அரசியல் உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் கடவுள் பலம் அளிக்கட்டும். ஓம் சாந்தி!"
जनसेवा में जीवनपर्यंत समर्पित रहे भाजपा के वरिष्ठ नेता श्यामदेव राय चौधरी जी के निधन से अत्यंत दुख हुआ है। स्नेह भाव से हम सभी उन्हें 'दादा' कहते थे। उन्होंने ना केवल संगठन को सींचने और संवारने में अहम योगदान दिया, बल्कि काशी के विकास के लिए भी वे पूरे समर्पण भाव से जुटे रहे।… pic.twitter.com/trRbl7AK0z
— Narendra Modi (@narendramodi) November 26, 2024