பாரத ரத்னா மஹாமானா பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் கொள்ளுப் பேரன் கிரிதர் மாளவியா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கங்கை நதித் தூய்மை இயக்கம் மற்றும் கல்வி உலகிற்கு திரு கிரிதர் மாளவியா அளித்த பங்களிப்பை திரு மோடி பாராட்டியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"பாரத ரத்னா மஹாமானா பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் கொள்ளுப் பேரன் கிரிதர் மாளவியாவின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவு கல்வி உலகிற்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கங்கையைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். நீதித்துறை சேவையில் தனது பணியின் மூலம் அவர் தனக்கென ஒரு வித்தியாசமான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். பலமுறை அவரைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில், அவர் எனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் என்னை முன்மொழிந்தார். இது எனக்கு மறக்க முடியாததாக இருக்கும். இந்த துயரமான நேரத்தில் கடவுள் அவரது குடும்பத்திற்கு பலத்தை அளிக்கட்டும். ஓம் சாந்தி!"
भारत रत्न महामना पंडित मदन मोहन मालवीय जी के प्रपौत्र गिरिधर मालवीय जी के निधन से अत्यंत दुख हुआ है। उनका जाना शिक्षा जगत के साथ-साथ पूरे देश के लिए एक अपूरणीय क्षति है। गंगा सफाई अभियान में उनके योगदान को हमेशा याद किया जाएगा। न्यायिक सेवा में अपने कार्यों से भी उन्होंने अपनी एक…
— Narendra Modi (@narendramodi) November 18, 2024