பிரபல நாட்டுப்புறப் பாடகர் ஷாரதா சின்ஹா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஷாரதா சின்ஹாவின் மைதிலி, போஜ்புரி நாட்டுப்புறப் பாடல்கள், கடந்த பல தசாப்தங்களாக மிகவும் புகழ்பெற்றவை என்று கூறியுள்ள திரு மோடி நம்பிக்கையூட்டும் பெரும் பண்டிகையான, சாத்-துடன் தொடர்புடைய அவரது இனிய பாடல்கள் எப்போதும் நினைவில் நிற்கும் என்று கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பிரபல நாட்டுப்புறப் பாடகர் ஷாரதா சின்ஹா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இவர் பாடிய மைதிலி மற்றும் போஜ்புரி நாட்டுப்புறப் பாடல்கள் கடந்த பல தசாப்தங்களாக மிகவும் பிரபலமாக உள்ளன. நம்பிக்கையின் மாபெரும் திருவிழாவான சாத் தொடர்பான அவரது மெல்லிசைப் பாடல்களின் எதிரொலியும் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்தத் துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி!”
सुप्रसिद्ध लोक गायिका शारदा सिन्हा जी के निधन से अत्यंत दुख हुआ है। उनके गाए मैथिली और भोजपुरी के लोकगीत पिछले कई दशकों से बेहद लोकप्रिय रहे हैं। आस्था के महापर्व छठ से जुड़े उनके सुमधुर गीतों की गूंज भी सदैव बनी रहेगी। उनका जाना संगीत जगत के लिए एक अपूरणीय क्षति है। शोक की इस… pic.twitter.com/sOaLvUOnrW
— Narendra Modi (@narendramodi) November 5, 2024