காசி வித்வத் பரிஷத் தலைவர் பேராசிரியர் ராம் யத்னா சுக்லாவின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பேராசிரியர் சுக்லாவின் மறைவு கல்வி, ஆன்மீகம் மற்றும் கலாச்சார உலகுக்கு பேரிழப்பு என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“காசி வித்யாபரிஷத் தலைவர் பேராசிரியர் ராம் யத்னா சுக்லாவின் மறைவு, கல்வி, ஆன்மீகம் மற்றும் கலாச்சார உலகுக்கு <ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவர் சமஸ்கிருத மொழி மற்றும் பாரம்பரிய நூல்களை பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றினார். இந்த துயரமான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி”.
काशी विद्वत्परिषद् के अध्यक्ष प्रो. रामयत्न शुक्ल जी का निधन शैक्षणिक, आध्यात्मिक और सांस्कृतिक जगत के लिए एक अपूरणीय क्षति है। उन्होंने संस्कृत भाषा और पारंपरिक शास्त्रों के संरक्षण में महत्वपूर्ण भूमिका निभाई। शोक की इस घड़ी में उनके परिजनों के प्रति मेरी संवेदनाएं। ओम शांति! pic.twitter.com/76hcBKZKON
— Narendra Modi (@narendramodi) September 20, 2022