காசி விஸ்வநாதர் தாம் அர்ப்பணிப்பு மற்றும் ராமர் கோயில் பிரதிஷ்டையில் ஒரு பகுதியாக இருந்த ஆச்சார்ய லக்ஷ்மிகாந்த் தீக்ஷித் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
காசியின் அறிவார்ந்த பாரம்பரியத்தில் பிரபலமான மனிதர் ஆச்சார்யா என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“நாட்டின் சிறந்த அறிஞரும், சங்வேத பள்ளியின் யஜுர்வேத ஆசிரியருமான லக்ஷ்மிகாந்த் தீட்சித் மறைந்தார் என்ற சோகமான செய்தியை அறிந்தேன்.காசியின் அறிஞர் பாரம்பரியத்தின் புகழ்பெற்ற மனிதர் தீட்சித். காசி விஸ்வநாதர் தாம் மற்றும் ராமர் கோயில் திறப்பு விழாவில் நான் அவர் முன்னிலையில் இருந்தேன். அவரது மறைவு சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.”
देश के मूर्धन्य विद्वान और साङ्गवेद विद्यालय के यजुर्वेदाध्यापक लक्ष्मीकान्त दीक्षित जी के निधन का दुःखद समाचार मिला। दीक्षित जी काशी की विद्वत् परंपरा के यशपुरुष थे। काशी विश्वनाथ धाम और राम मंदिर के लोकार्पण पर्व पर मुझे उनका सान्निध्य मिला। उनका निधन समाज के लिए अपूरणीय क्षति…
— Narendra Modi (@narendramodi) June 22, 2024