ஹிமாச்சல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது ;
“ஹிமாச்சல பிரதேச மாநிலம் உனாவில் உள்ள தொழிற்சாலையில் நிகழ்ந்துள்ள விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர்”
“ஹிமாச்சல பிரதேச தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் : பிரதமர்”