உத்தராகண்டின் சம்பாவாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையையும், பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலக ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“உத்தராகண்ட் மாநிலம் சம்பாவாட்டில் ஏற்பட்ட விபத்து இதயத்தை உலுக்குகிறது. இதில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நான் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது: பிரதமர்"
“உத்தராகண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகையைப் பிரதமர் @narendramodi அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்கள் ரூ.50,000 பெறுவார்கள்.”
PM @narendramodi has announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who lost their lives due to an accident in Uttarakhand. The injured would be given Rs. 50,000.
— PMO India (@PMOIndia) February 22, 2022
उत्तराखंड के चंपावत में हुई दुर्घटना हृदयविदारक है। इसमें जिन लोगों की मृत्यु हुई है, मैं उनके परिजनों के प्रति अपनी शोक-संवेदना व्यक्त करता हूं। स्थानीय प्रशासन राहत और बचाव कार्य में जुटा हुआ है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 22, 2022