ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னாரில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திகளில்,
“ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னாரில் நிலச்சரிவால் ஏற்பட்ட விபத்து மிகுந்த வருத்தமளிக்கிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்: பிரதமர் @narendramodi
ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னாரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் அளிக்கப்படும்: பிரதமர் @narendramodi”, என்று கூறப்பட்டுள்ளது.
हिमाचल प्रदेश के किन्नौर में भूस्खलन से हुआ हादसा अत्यंत दुखद है। इसमें जान गंवाने वाले लोगों के परिजनों के प्रति मेरी हार्दिक संवेदनाएं। दुर्घटना में घायल हुए लोगों के इलाज की पूरी व्यवस्था की जा रही है। मैं उनके शीघ्र स्वस्थ होने की कामना करता हूं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 25, 2021