உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவில் ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். @PMOIndia சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது வருத்தத்தையும், விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய தனது மனமார்ந்த பிரார்த்தனைகளையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
"உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
उत्तराखंड के अल्मोड़ा में हुए सड़क हादसे में जिन्होंने अपनों को खोया है, उनके प्रति मेरी शोक-संवेदनाएं। इसके साथ ही मैं सभी घायलों की शीघ्र कुशलता की कामना करता हूं। राज्य सरकार की देखरेख में स्थानीय प्रशासन राहत और बचाव के हरसंभव प्रयास में जुटा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 4, 2024
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in Almora, Uttarakhand. The injured would be given Rs. 50,000. https://t.co/KAjq9Agj8i
— PMO India (@PMOIndia) November 4, 2024