உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் ஏற்பட்ட சாலை விபத்து மனதை மிகவும் உருக்குகிறது. இந்த விபத்தில் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுகிறேன்: பிரதமர்”
उत्तर प्रदेश के मथुरा में हुई सड़क दुर्घटना हृदयविदारक है। इस हादसे में जिन्होंने अपने प्रियजनों को खो दिया है, उनके प्रति मेरी गहरी संवेदनाएं। इसके साथ ही घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 7, 2022