ராஜஸ்தானின் பரத்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;
"ராஜஸ்தானின் பரத்பூரில் ஏற்பட்ட சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. குஜராத்திலிருந்து புனித யாத்திரை சென்று உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்."
"பரத்பூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000 வழங்கப்படும்.
राजस्थान के भरतपुर में हुआ सड़क हादसा अत्यंत दुखद है। इसमें गुजरात से धार्मिक यात्रा पर गए जिन श्रद्धालुओं को अपनी जान गंवानी पड़ी है, उनके परिवारजनों के प्रति मेरी शोक-संवेदनाएं। इसके साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 13, 2023
The Prime Minister has approved an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the mishap in Bharatpur. The injured would be given Rs. 50,000 each.
— PMO India (@PMOIndia) September 13, 2023
રાજસ્થાનના ભરતપુર પાસે ધાર્મિક યાત્રાએ જતા ગુજરાતના શ્રધ્ધાળુઓને નડેલા માર્ગ અકસ્માતની ઘટના ખૂબ જ દુ:ખદ છે. આ અકસ્માતમાં જીવ ગુમાવનાર શ્રધ્ધાળુઓના પરિવારજનો પ્રત્યે મારી સંવેદના વ્યક્ત કરું છું. ઈજાગ્રસ્તો ઝડપથી સ્વસ્થ થાય તે માટે પ્રાર્થના: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 13, 2023