மத்தியப்பிரதேசத்தின் கார்கோனில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்கவும் திரு மோடி உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“கார்கோனில் நிகழ்ந்த சாலை விபத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். விபத்தில் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் விழைகிறேன். மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் நிர்வாகம் செய்து வருகிறது: பிரதமர் @narendramodi”.
“மத்தியப்பிரதேசத்தின் கார்கோனில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர்”, என்று கூறப்பட்டுள்ளது.
खरगोन में हुआ सड़क हादसा अत्यंत दुखद है। इसमें जिन लोगों ने अपने प्रियजनों को खोया है, उनके प्रति मेरी शोक-संवेदनाएं। इसके साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। राज्य सरकार की देखरेख में स्थानीय प्रशासन मौके पर हरसंभव मदद में जुटा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 9, 2023
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased in the bus accident in Khargone, Madhya Pradesh. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 9, 2023