ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனர் திரு. ராமோஜி ராவ் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராமோஜி ராவ் இந்திய ஊடகங்களில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று திரு மோடி கூறியுள்ளார். அவரது வளமான பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"ராமோஜி ராவ் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ஊடகங்களில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவரது வளமான பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளன. அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகள் மூலம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் புதுமை மற்றும் சிறப்புக்கான புதிய தரங்களை அமைத்தார்.
ராமோஜி ராவ் அவர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவருடன் உரையாடவும், அவரது ஞானத்திலிருந்து பயனடையவும் பல வாய்ப்புகளைப் பெற்றது எனது அதிர்ஷ்டம். இந்தக் கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற அபிமானிகளுக்கு இரங்கல். ஓம் சாந்தி."
The passing away of Shri Ramoji Rao Garu is extremely saddening. He was a visionary who revolutionized Indian media. His rich contributions have left an indelible mark on journalism and the world of films. Through his noteworthy efforts, he set new standards for innovation and… pic.twitter.com/siC7aSHUxK
— Narendra Modi (@narendramodi) June 8, 2024
శ్రీ రామోజీ రావుగారి మరణం ఎంతో బాధాకరం.ఆయన భారతీయ మీడియాలో విప్లవాత్మకమైన మార్పులు తీసుకొచ్చిన ఒక దార్శనికుడు.ఆయన సేవలు సినీ,పత్రికారంగాలలో చెరగని ముద్ర వేశాయి. తన అవిరళ కృషి ద్వారా, ఆయన మీడియా, వినోద ప్రపంచాలలో శ్రేష్టమైన ఆవిష్కరణలకు నూతన ప్రమాణాలను నెలకొల్పారు.
— Narendra Modi (@narendramodi) June 8, 2024
రామోజీ రావు… pic.twitter.com/1cjAFSF6xB