தைனிக் ஜாக்ரன் குழுமத்தின் தலைவர் திரு யோகேந்திர மோகன் குப்தாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
“தைனிக் ஜாக்ரன் குழுமத்தின் தலைவர் யோகேந்திர மோகன் குப்தா அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவு கலை, இலக்கியம் மற்றும் பத்திரிகை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
दैनिक जागरण समूह के चेयरमैन योगेन्द्र मोहन गुप्ता जी के निधन से अत्यंत दुख हुआ है। उनका जाना कला, साहित्य और पत्रकारिता जगत के लिए एक अपूरणीय क्षति है। शोक की इस घड़ी में उनके परिजनों के प्रति मैं अपनी संवेदनाएं व्यक्त करता हूं। ऊं शांति!
— Narendra Modi (@narendramodi) October 15, 2021