லூதியானாவில் விஷவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் பிரதமர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"லூதியானாவில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட துயரம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடாக அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்."
Expressing grief on the tragedy in Ludhiana due to a gas leak, PM @narendramodi has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000.
— PMO India (@PMOIndia) May 1, 2023