சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் நடைபெற்ற 84-வது சிஆர்பிஎஃப் தின அணிவகுப்புக்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி சிஆர்பிஎஃபிற்கு பாராட்டு தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் முதன்முறையாக சிஆர்பிஎஃப் தின அணிவகுப்பு நடைபெற்றது. இது குறித்து சிஆர்பிஎஃப் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், ”சிஆர்பிஎஃப்-ன்(@crpfindia) அற்புதமான நிகழ்வு. இந்த சிறப்புமிக்க படைக்குப் பாராட்டுக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
Wonderful gesture by @crpfindia. Compliments to this distinguished force. https://t.co/mRoYOBiMqC
— Narendra Modi (@narendramodi) March 26, 2023