பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில், பிரகதி (PRAGATI) அமைப்பின் 2020ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய – மாநில அரசுகளின் செயல்திறன்மிக்க ஆளுகை மற்றும் குறித்த நேரத்தில் திட்டப் பணிகள் செயலாக்கத்திற்கான பல்வகை அமைப்பிலான, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் அடிப்படையிலான இந்தக் கூட்டம் பிரதமரின் 32-வது அமர்வாகும்.
இன்றைய பிரகதி கூட்டத்தில் பிரதமர் மொத்தம் 11 அம்சங்கள் குறித்து, ஆலோசனை நடத்தினார். இதில் 9 தாமதிக்கப்பட்ட திட்டங்கள் ஆகும். ஒடிசா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், பீகார், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உத்தரபிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில், 3 மத்திய அமைச்சகங்களின் இந்த திட்டங்கள் ரூ.24,000 கோடி மதிப்பிலானவை. ரயில்வே அமைச்சகத்தின் 3 திட்டங்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் 5 திட்டங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஒரு திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.
PMJJBY மற்றும் PMSBY காப்பீ்ட்டு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு
இந்தக் கூட்டத்தில், மத்திய நிதி சேவைகள் துறையின் பிரதமரின் ஜீவன்ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகிய காப்பீட்டு திட்டங்கள் தொடர்பான குறைகளைக் களைவது, மற்றும் செயல்திறன் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.
மின்னணு நிர்வாகத்தின் மூலம், செயல்திறன் கொண்ட கொள்கைக்கான விரிவான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையான, குற்றம் மற்றும் குற்றவியல் தேடுதல் கட்டமைப்பு மற்றும் நடைமுறை திட்டத்தின் அம்சங்கள் குறித்தும் பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.
முந்தைய 31 பிரகதி கலந்துரையாடல் கூட்டங்களில், ரூ. 12.30 லட்சம் கோடி முதலீட்டு மதிப்பு கொண்ட மொத்தம் 269 திட்டங்கள் குறித்து பிரதமர் ஆய்வு நடத்தியுள்ளார். பல்வேறு வகையான 17 துறைகளைச் சேர்ந்த 47 அரசு திட்டங்கள் தொடர்பான குறைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.