மத்திய – மாநில அரசுகளை உள்ளடக்கிய, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு அடிப்படையிலான பல்வகை அமைப்பான, ஆக்கப்பூர்வ ஆளுகை மற்றும் குறித்த நேரத்தில் செயலாக்கத்திற்கான பிரகதியின் 39-ஆவது கலந்துரையாடல் கூட்டம், பிரதமர் திரு நரேந்திர மோதி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் 9 திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவற்றில் 8 திட்டங்களில் 3 ரயில்வே அமைச்சகம் சார்ந்தவை. தலா 2 சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் மின்துறை அமைச்சகம் சார்ந்தவை என்பதோடு, எஞ்சிய ஒரு திட்டம் பெட்ரோலியம் & இயற்கை எரிவாயுத் துறை சார்ந்ததாகும். இந்த 8 திட்டங்களும் முறையே, பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்களில் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்ட செலவு அதிகரிப்பதை தவிர்க்க, இந்தப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நிறைவேற்றி முடிக்குமாறு பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த கலந்துரையாடலின் போது, ஊட்டச்சத்து இயக்கம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். ஊட்டச்சத்து இயக்கத்தை ஒவ்வொரு மாநிலமும் முழுமையான அரசு அணுகுமுறையுடன் ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து அடிமட்ட அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் பிற உள்ளூர் அமைப்புகளையும் ஈடுபடுத்துவது குறித்தும் அவர் விவாதித்தார். இத்தகைய நடவடிக்கை இந்த திட்டம் அனைவரிடமும் சென்றடைவதையும் அதனை முன்னெடுத்து செல்வதையும் மேம்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முந்தைய 38 பிரகதி கூட்டங்களில், ரூ.14.64 லட்சம் கோடி மதிப்பிலான 303 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
At the 39th PRAGATI meeting today, reviewed eight projects spread across the ministries of Railways, Roads, Power and Petroleum worth over Rs. 20,000 crore. Also reviewed aspects relating to the Poshan Abhiyan. https://t.co/JYxtEATgw5
— Narendra Modi (@narendramodi) November 24, 2021